Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்களை கழிவறையைச் சுத்தப்படுத்தவைத்த கைதிகள்

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. லண்டனில், அதே தினத்தில் பாகிஸ்தான் ஹாக்கி அணியை இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தத் தருணத்தில், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலிலிருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள, பர்ஹன்பூர் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடியிருக்கின்றனர். பாகிஸ்தான் ஆதரவுக் கோஷங்களையும் எழுப்பியிருக்கின்றனர். கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 இளைஞர்களை மத்தியப்பிரதேச போலீஸ் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்தது. ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதைக் கொண்டாடும் வகையில், பட்டாசு வெடித்ததாகக் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இளைஞர்கள் மீது பதியப்பட்டிருந்த தேசத்துரோக வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 

ஜூன் 18-ம் தேதி கைதுசெய்யப்பட்ட இவர்கள் அனைவரும், கந்த்வா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்குச் சென்றவர்களுக்கு வேறுவிதமான அனுபவம் கிடைத்தது. சிறையில் இருந்த சீனியர் கைதிகள், இவர்கள் ஒவ்வொருவருக்கும் கன்னத்தில் அறை கொடுத்துள்ளனர். அத்துடன், கழிவறை, சாக்கடை கால்வாய்களைச் சுத்தம்செய்யுமாறும் கூறியிருக்கின்றனர். தற்போது, நீதிமன்றம் இவர்களை ஜாமீனில் விடுவித்துள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்துள்ள  மன்சூரி என்பவர் கூறுகையில், 'நான் பட்டதாரி. போலீஸ் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளேன். தற்போது, என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால், என் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது'' என்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close