Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரவி சாஸ்திரியைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவைத்த 'மும்பை லாபி'!

ந்திய கிரிக்கெட்டில், 'மும்பை லாபி ' வெகு பிரபலம். மும்பையைச் சேர்ந்த நான்கைந்து வீரர்கள் இந்திய அணியில் இருந்த காலமும் உண்டு. அணியில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். கவாஸ்கர் கேப்டனாக இருந்தால், மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார். ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார் போன்றோர் அப்படித்தான் இந்திய அணியில் கோலோச்சினர். அணி நிர்வாகமும் மும்பைவாசிகள் கையில்தான் இருந்தது. இந்த நிலை மாறியுள்ளதால், தற்போது சச்சினால் `மும்பை லாபி' மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. 

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகியுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் திடீரென பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார். ஒதுங்கியிருந்த ரவி சாஸ்திரியைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவைத்தது, சச்சின் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரவி சாஸ்திரி, சச்சின் இருவருமே தற்போது லண்டனில் குடும்பத்துடன் ஓய்வெடுத்துவருகின்றனர். கடந்த முறை பயிற்சியாளர் தேர்வின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், `பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பித்து, கியூவில் வர மாட்டேன்' என்கிற முடிவில் ரவி சாஸ்திரி இருந்தார். சச்சின் சமாதானப்படுத்திய பிறகே, ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார். 

பயிற்சியாளர் தேர்வுக் கமிட்டியில் சச்சினும் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். மற்ற இருவர் கங்குலி, வி.வி.எஸ்.லக்‌ஷ்மண்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close