Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி-யால் விலைவாசி உயராது..! நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆரூடம்

'ஜிஎஸ்டி முறையால் பொருள்களின் விலைவாசி உயராது' என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்றத்தில் இன்று இரவு நடைபெற உள்ள ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பங்கேற்பதற்காக, நிதி அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி  சென்றார். அப்போது, சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'உணவுப் பொருள்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். ஜிஎஸ்டி குறித்த விழிப்புஉணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஜிஎஸ்டி செயல்பாட்டுக்கு வந்த பின்புதான் அதனுடைய முழுமையான தாக்கம் தெரியும்.

ஜிஎஸ்டி-யால் விலைவாசி உயராது. ஒருவேளை ஜிஎஸ்டி-யால் விலைவாசி உயரும் பட்சத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும். விலை உயரும் பொருளின்மீது விதிக்கப்பட்டிருக்கும் வரியின் அளவு குறைக்கப்படும். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படும். ஜிஎஸ்டி விழாவில் பங்கேற்க உள்ளதால், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்க முடியவில்லை' என்றார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close