Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘இங்கு அரசியல் பேசவில்லை!’ - கை கோத்துக்கொண்ட காங்கிரஸ்-அ.தி.மு.க.

 டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் மகனுக்கும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மகளுக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில், அரசியல் எதுவும் பேசப்படவில்லை என, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் கடும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு கொடிபிடிக்கும் படலம் தலைதூக்கியுள்ளது. சசிசலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி.தினகரன் அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி என புற்றீசல்கள் போல அணிகளும் உதயமாகியுள்ளன. இதனால், கட்சித் தொண்டர்களின் மனநிலை, மதில்மேல் பூனையாக உள்ளது. 
சசிகலா அணியிலிருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் தனி ரூட்டில் செல்லத் தொடங்கியுள்ளார். அவரது ஆதரவு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க-விலிருந்து ஓரங்கட்டும் முடிவை எடுத்தனர். எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திக்கவில்லை. அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்கும் விவகாரத்தில் கைதான டி.டி.வி.தினகரனையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், ஆண்டுந்தோறும் அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றதால், அதையும் புறக்கணித்தார் டி.டி.வி.தினகரன். இருவரும் நேரில் சந்திப்பதைத் தவிர்த்துவருகின்றனர். டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான தளவாய் சுந்தரத்தின் இல்ல திருமண நிச்சயதார்த்த விழாவில், டி.டி.வி.தினகரனும், முதல்வரும் பங்கேற்றனர். அப்போதுகூட இருவரும் சந்திக்கவில்லை. இவ்வாறு எதிரும்புதிருமாக முதல்வரும் டி.டி.வி.தினகரனும் உள்ளனர். 
அ.தி.மு.க-வில் நடந்துவரும் களேபரத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் சம்பந்தியாகியுள்ளனர். திருநாவுக்கரசரின் மகள் அமிருதாவுக்கும் இசக்கி சுப்பையாவின் மகன் இசக்கி துரைக்கும் கடந்த 28-ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்த விழா நடந்துள்ளது. இந்த விழாவில், டி.டி.வி.தினகரன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்எல்ஏ-க்கள், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து, விழாவில் பங்கேற்ற அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கெனவே கட்சி வேறுபாடின்றி சம்பந்தியானவர்கள் உள்ளனர். அந்த வரிசையில் திருநாவுக்கரசரும்  இசக்கி சுப்பையாவும் சம்பந்தியாகி இருக்கின்றனர். இரு குடும்பத்தினரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தி.மு.க. உள்ளதால், மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்எல்ஏ-க்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். அவர்களை இசக்கி சுப்பையாவும் வரவேற்றார். அதுபோல, நிகழ்ச்சிக்கு வந்த அரசியல் கட்சித் தலைவர்களை திருநாவுக்கரசரும்  இசக்கி சுப்பையாவும் சேர்ந்தே வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில், அனைத்துக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். டி.டி.வி.தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் விழாவில் பங்கேற்றபோது, அவர்களையும் திருநாவுக்கரசர் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோரின் குடும்பத்தினர் வரவேற்றனர். மணமக்களுடன் சேர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நலம் விசாரிப்பைத் தவிர யாரும் அரசியல் பேசவில்லை" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close