Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதன் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்ததாகத் தொடர்ந்த வழக்கில் மதன் சொத்துகளை முடக்கி அதிரடி காட்டியுள்ளது அமலாக்கத்துறை. தமிழகம் மற்றும் கேரளாவில் மதனுக்கு சொந்தமான 6.35 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 

madhan

எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாயை மதன் மோசடி செய்ததாக 133 பெற்றோர்கள்  புகார் அளித்தனர்.  இந்தப் புகாரின் பேரில் மதனை காவல்துறையினர் பல இடங்களில் தேடி வந்தனர். இறுதியில், திருப்பூரில் தலைமறைவாக இருந்த மதனை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறையினர் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். 

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 133 பேரிடம் இருந்து 91 கோடி பெற்றதாக மதன் ஒப்பு கொண்டார். ஆனால் அந்த தொகையை கல்லூரி நிர்வாகத்துக்கு கொடுத்துவிட்டதாக தெரிவித்தார். பணம் கொடுத்ததாக மதன் கூறியதை கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்நிலையில் மதனுக்கு சொந்தமாக சென்னையில் இருந்த இரண்டு இடங்களும், கேரளாவில் இருந்த இரண்டு இடங்களும் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் மதன் வாங்கியிருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்தது. இதனையடுத்து 6.35 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, நிலம் உள்ளிட்ட மதனுக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close