Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாமியார் ஊரில் கால்பதித்த விஜயகாந்துக்கு ராஜ மரியாதை!

vijaykanth

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செம்பேடு கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் சொந்த ஊரில் நடைபெற்ற விழா என்பதால் விஜயகாந்துக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டது. 

vijaykanth

உடல்நலக் குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விஜயகாந்த் தவிர்த்து வந்தார். கடந்த 20-ம் தேதி சென்னையிலுள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழா நடைபெற்றது. இதில் விஜயகாந்த் நிர்வாகிகளுடன் இணைந்து நோன்பு திறந்தார். மேலும் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவை கடுமையாக விமர்சித்து பேசினார். நீண்ட நாள்களுக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதே தெம்போடு விஜயகாந்த் பேசியது அவரின் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் பிரேமலதாவின் சொந்த ஊரான செம்பேடு கிராமத்தில் இன்று கோயில்  கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார் விஜயகாந்த். அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close