Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசுக்கு தமிழக அரசு சாதகமாக நடக்க இதுதான் காரணம்! சொல்கிறார் வசந்தகுமார்

\

நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தக காங்கிரஸ் மாநிலத் தலைவர் வசந்தகுமார் எம்எல்ஏ, 'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் ஜெயலலிதா குற்றவாளி இல்லை எனக் கூறி மண்டபம் கட்டி வருகின்றனர். பாலில் கலப்படம் இருந்தது உறுதி செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டியதுதான். இப்போது மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டும்தான் லாபம். அனைத்து பொருள்களின் விலையும் இனி உயரும். பான்பராக் மற்றும் குட்கா விவகாரத்தில் தமிழக அரசு மேல் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உள்ளது. அதில் அமைச்சர்கள், அதிகாரிகள் பெயர் இல்லை என்றால் அதனை வெளிப்படையாக அறிவித்து இருக்கலாம். ஏன் அறிவிக்கவில்லை.

தமிழகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்குப் பதிவு நீட்டிப்பு வழங்கப்படுகிறது. பயன்படாத வயது முதிர்ந்த மாடுகளைத்தான் விவசாயிகள் விற்கின்றனர். மாடுகளை விற்கக் கூடாது எனக் கூறினால் பாஜகவினர் வீட்டில்தான் மாடுகளை விட வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் வந்துவிடும் என்கிறார்கள். பின்னர் எதற்கு இருக்கிறது காவல்துறை. நீட் தேர்வு வராது எனத் தவறான கருத்தைப் பரப்பவில்லை என்றால் தமிழகத்தில் அதிக மாணவர்கள் வெற்றி பெற்று இருப்பார்கள். தமிழக  அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின்  ஊழலை மத்திய அரசு தூசு தட்டும் என்பதால்தான் தமிழக அரசு மத்திய அரசுக்குச் சாதகமாக நடக்கிறது. ஒட்டு மொத்த மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியதுதான் மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை'' என்று தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close