Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவுக்கு வரும் சீனாவின் மிகப்பெரிய கார் நிறுவனம்!

 

சீனா

 

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் தனது கார்களைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும், சரியான தருணத்தை எதிர்பார்த்திருந்தது, சீனாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான SAIC. இந்தியாவில் மாருதி எப்படியோ சீனாவில் Shanghai Automotive Industry Corporation எனப்படும் SAIC அப்படி! இந்நிலையில் சவாலான இந்திய கார் சந்தையில் கால்பதிக்க, அந்த நிறுவனம் நாள் குறித்துவிட்டது; தனது குழும நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டனைச் சேர்ந்த Morris Garages எனப்படும் MG-யுடன் இணைந்து, இந்தியாவில் கார்களைத் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது. எனவே MG மோட்டார் இந்தியா என்ற பெயரில் களமிறங்க உள்ளதுடன், ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் CEO-வான ராஜீவ் சாபாவையே இந்த நிறுவனத்தின் தலைவராக நியமித்திருக்கிறது SAIC. ஆக அடிப்படையில் ஒரு சீன நாட்டைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் இருக்கும் ஒருவரை நிறுவனத்தின் தலைவராக நியமித்திருப்பது கவனிக்கத்தக்கது. 

 

SAIC

 

2019-ல் கார் உற்பத்தி ஆரம்பமாகும் என்பதுடன், SAIC நிறுவனத்தின் அனைத்து மாடல் கார்களும் இங்கே தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால், அவை MG லோகோவுடன்தான் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். மேலும் SAIC-க்குச் சொந்தமான மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களான Maxus, Roewe ஆகியவையும், இந்தியாவில் ஒன்றன்பின் ஒன்றாக அறிமுகமாவதற்கான சாத்தியங்களும் இருக்கிறது! உலகளவில் ஹேட்ச்பேக், செடான், எம்பிவி, எஸ்யூவி, ஹைபிரிட், எலெக்ட்ரிக், ஸ்போர்ட்ஸ் கூபே, கன்வர்ட்டபிள் என அனைத்து செக்மென்ட்களிலும் கார்களை விற்பனை செய்யும் SAIC & MG நிறுவனங்கள், இந்தியாவில் முதற்கட்டமாக எஸ்யுவிகளைக் களமிறக்க உள்ளன.

அந்த செக்மென்ட்டில் தற்போது மக்கள் தரும் அதிக வரவேற்பே, இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், கடந்த மாத இறுதியில், குஜராத்தில் இருக்கும் Halol-ல் அமைந்துள்ள தனது கார் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தியது. தற்போது தனது கூட்டாளியின் அந்த மூடப்பட்ட தொழிற்சாலையைத்தான், MG மோட்டார் இந்தியா நிறுவனம், தனது கார்களைத் தயாரிப்பதற்காகக் பயன்படுத்திக்கொள்ள எத்தனித்திருக்கிறது SAIC.  

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close