Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூரில் உலக ரத்ததான கொடையாளர்கள் தின பேரணி!


            

                            கரூரில் உலக ரத்ததான கொடையாளர்கள்
                            தின பேரணி!.
                            கலெக்டர் தொடங்கி வைத்தார்!.

 கரூரில் உலக ரத்ததான கொடையாளர்கள் தின பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பேரணியைத் தொடங்கி வைத்தார். கரூர் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே தொடங்கிய இந்த பேரணியில் கரூர் பசுபதீஸ்வரர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் குமரன் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் 250 பேர் கலந்து கொண்டனர். பேரணியைக் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்குபெற்ற மாணவ,மாணவிகள் ரத்ததானம் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும்,வாசகங்களை கோஷமிட்டபடியும் சென்றனர்.
 இப்பேரணி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, தின்னப்பா தியேட்டர் வழியாக, புதிய பேருந்து நிலையம், ஜவஹர் கடை வீதி,நகராட்சி அலுவலகம் வழியாக பசுபதீஸ்வரர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சென்று, நிறைவடைந்தது. அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் 2016-17 ஆண்டில் அதிகமுறை ரத்ததானம் செய்த 6 கொடையாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கிடையே ரத்ததானம் குறித்த விழிப்புஉணர்வு தொடர்பான தலைப்புகளில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், ஆர்.டி.ஓ பாலசுப்ரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் ஆர்.சுமதி, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் வசந்தி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் ஜெனிபர் அருள்மேரி மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close