Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

22 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவிஉயர்வு... 13 பேர் பணியிடமாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் காவல்துறையில் உயர் பதவிகளில் இருந்த 22 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 13 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

police

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த பொன்மாணிக்கவேல், ரயில்வே ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக ரவி ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி.யாக தமிழ்ச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.சுதாகர் ஐ.பி.எஸ், வட சென்னை இணை ஆணையராகப் பொறுப்பேற்கிறார். 

police 1

மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாகப் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரை எஸ்.பி.யாக மணிவண்ணன், தூத்துக்குடி எஸ்.பி.யாக மகேந்திரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பவானீஸ்வரி, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.யாக தேன்மொழி, வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக வனிதா, சேலம் சரக டி.ஐ.ஜி.யாக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

police

police

police

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close