Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுங்கள்... கலெக்டரிடம் குமுறிய விவசாயிகள்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் என்றாலே காரசாரம், வெளிநடப்பு என தூள் பறக்கும். இந்த முறை எந்தவித சலசலப்பும் இல்லாமல் நடந்திருக்கிறது. வழக்கமாக, பயிர் இன்சூரன்ஸ் கிடைக்காமல் விவசாயிகள் கலெக்டரிடம் போராடிக்கொண்டிருப்பார்கள். இந்த முறை இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை என்று கேட்டவர்களுக்கு வாயடைக்கும் விதமாக, 10 நாள்களில் கிடைத்துவிடும் என்று  பதில் சொன்னார் கலெக்டர் மலர்விழி.


     
       

இப்படி இன்சூரன்ஸ் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது விவாதம், காவல்துறை பக்கம் மாறியது. இளையான்குடி பகுதியிலிருந்து வந்திருந்த விவசாயி அய்யாச்சாமி, 'காவல்துறையினர் மீது  மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 

விவசாயி அய்யாச்சாமி பேசுகையில், ’சிவகங்கைப் பகுதியில் போலீஸாரின் தொந்தரவு எங்களுக்கு பெரும் இம்சையாக இருக்கிறது. தவறு செய்பவர்களை, ஆவணமில்லாதவர்களின் வாகனங்களை நிறுத்தி, போலீஸார் சோதனை நடத்துவதில் தவறில்லை. ஓரிடத்தில் க்ரைம் போலீஸார் நிற்கிறார்கள்: இன்னொரு இடத்தில் சட்டம் - ஒழுங்கு போலீஸார், மற்றொரு இடத்தில் போக்குவரத்து போலீஸார் நிற்கிறார்கள். ஆனால், ஒரு இடத்தில் அபராதம் செலுத்திவிட்டு இன்னோர் இடத்திலும் அபராதம் கட்டவேண்டியிருக்கிறது. இது, காவல்துறையின் அடக்குமுறையாகும். விவசாயிகளைப் பொறுத்தவரை, மழை கொஞ்சம் பெய்திருப்பதால் உரம் வாங்க ஏர்உழ என பல்வேறு காரியங்களுக்குச் செல்லவேண்டியிருக்கும். அந்த நேரத்தில் எங்களை இம்சைப்படுத்தக்கூடாது. கேட்டால் எஸ்.பி ஆர்டர் போட்டிருக்கார்னு சொல்லுறாங்க. தயவுசெய்து போலீஸை கட்டுப்படுத்துங்கள்’ என்று வலியுறுத்தினார். 

      
       


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close