Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி எதிரொலி...புதுச்சேரியில் காலவரையின்றி சினிமா காட்சிகள் ரத்து

”திங்கட்கிழமை முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளும் கால வரையறையின்றி மூடப்படும்” என்று புதுச்சேரி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லக்கி பெருமாள் தெரிவித்துள்ளார்.

திரையரங்கம் ஜி.எஸ்.டி

நாடெங்கிலும் இன்று முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. அதையொட்டி, புதுச்சேரியில் இயங்கிவரும் திரையரங்குகளுக்கு டிக்கெட்டுகளின் திருத்தப்பட்ட கட்டணத்தை புதுச்சேரி அரசு அறிவித்தது. அதன்படி ஏ.சி திரையரங்குகளில் பாக்ஸ் ரூ.175, பால்கனி/டீலக்ஸ் ரூ.160, முதல் வகுப்பு ரூ.105, இரண்டாம் வகுப்பு ரூ.80, மூன்றாம் வகுப்பு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏ.சி இல்லாத திரையரங்குகளில், பாக்ஸ் ரூ.70, பால்கனி/டீலக்ஸ் ரூ.55, முதல் வகுப்பு ரூ.45, இரண்டாம் வகுப்பு ரூ.35, மூன்றாம் வகுப்பு ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய டிக்கெட்டுகளின் விலையை ஜூலை 7-ம் தேதிக்குள் திரையரங்குகளின் உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, புதுச்சேரி திரையரங்கங்கள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லக்கி பெருமாள், ”தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளும் திங்கள்கிழமை முதல் மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் “ஜிஎஸ்டி-யில் மத்திய அரசு திரையரங்குகளுக்கு விதித்துள்ள 28% வரியை கட்டத் தயாராக இருக்கின்றோம். ஆனால், மாநில அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள 25% கேளிக்கை வரியினைக் கட்ட நாங்கள் தயாராக இல்லை. அதனால், மாநில அரசு கேளிக்கை வரியை ரத்துசெய்யும் வரை புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளும் காலவரையின்றி மூடப்படும். திங்கட்கிழமையிலிருந்து அனைத்துக் காட்சிகளும் ரத்துசெய்யப்படும். மாநில அரசின் கேளிக்கை வரி தொடர்பாக முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close