Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று தமிழகம் வருகை தருகிறார்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்!

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் ராம்நாத் கோவிந்த் மற்றும் மீரா குமார் இன்று சென்னைக்கு வருகைதருகின்றனர்.

ராம்நாத் கோவிந்த் மீரா குமார்

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14-ம் தேதி முதல் தாக்கல்செய்யப்பட்டுவருகின்றன. பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தலுக்கு ஆதரவு கோரி, இருவரும் இன்று சென்னைக்கு வருகின்றனர். பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ரஷ்ய கலாசார மையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும், கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார். மேலும், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியிடமும் ஆதரவு கேட்க உள்ளார். இதனிடையே, காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாரும் இன்று சென்னையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கேட்க  உள்ளார். மேலும் அவர், கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close