Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்..! தம்பிதுரை கோரிக்கை

'எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி மற்றும் ஜெயலலிதா ஏற்படுத்திய ஆட்சியைக் காப்பாற்ற, நண்பர்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று மதுரையில் தொடங்கியது. அரசு விழாவாகக் கொண்டாடப்படும் இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய தம்பிதுரை, 'எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அவரால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெயலலிதா விருப்பத்தின்படியே இந்த அரசு செயல்படுகிறது.

1977-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி எம்.ஜி.ஆர். முதல்வராகப் பொறுப்பேற்றார். 40 ஆண்டுகள் கழித்து அதே நாளில், அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவது மதுரைக்குக் கிடைத்த பெருமை.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இல்லாத நிலையில் சில சோதனைகளைச் சந்தித்துவருகிறோம். அதில், நாம் வெற்றிபெற வேண்டும். தமிழக உரிமைகளைக் காக்க நாம் ஒன்றுபட வேண்டும். எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி மற்றும் ஜெயலலிதா ஏற்படுத்திய ஆட்சியைக் காப்பாற்ற நண்பர்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்' என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close