Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமீப காலங்களில், விற்பனையில் சாதனை படைத்த மாருதி கார்கள் இவைதான்!

இந்தியாவில் அதிக கார்களை விற்பனைசெய்துவரும் மாருதி சுஸூகி, தனது 2017 மே மாத விற்பனையில், இரண்டு சாதனைகளைச் செய்திருக்கிறது. ஆம். 2017 தொடங்கி இன்றோடு ஆறு மாதங்கள் முடிந்துவிட்டன. இந்நிலையில், மே-2017 மாத நிலவரப்படி, 2017-ன் முதல் 5 மாதங்களின் முடிவில், 1.07 லட்சத்துக்கும் அதிகமான ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. அதன்படி பார்த்தால், மாதத்துக்கு சராசரியாக 21,400 கார்கள் விற்பனைசெய்யப்பட்டுள்ளதுடன், மே 2017-ல் அதிகபட்சமாக 23,618 ஆல்ட்டோ கார்கள் விற்பனையானது கவனிக்கத்தக்கது.

 

மாருதி ஆல்ட்டோ

ஆனால் ஜிஎஸ்டி வருகையால், ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்த கார் விற்பனையே குறைந்திருப்பதாகத் தகவல்கள் வந்த நிலையில், ஆல்ட்டோ தனது விற்பனை எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறதா என்பது, அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும். ரெனோ க்விட் காரால் கடும் போட்டி ஏற்பட்டாலும் அறிமுகமான நாள் முதலாக, அதாவது 17 ஆண்டுகளாக, இந்தியாவின் நம்பர்.1 செல்லிங் காராக, ஆல்ட்டோ திகழ்ந்துவருகிறது.

மாருதி சுஸூகியின் பட்ஜெட் ஹேட்ச்பேக்கான ஆல்ட்டோவைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக்கான பெலினோவும், விற்பனையில் அசத்திவருகிறது. இது அறிமுகமாகி, இன்னும் 2 ஆண்டுகளே நிறைவடையாத நிலையில் (20 மாதங்கள்),  2 லட்சம் கார்கள் என்கின்ற விற்பனை எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது பெலினோ. கடந்த 3 மாதங்களில், மாதத்துக்குச் சராசரியாக 16 ஆயிரம் கார்கள் விற்பனையானதை இங்கு சொல்லியாக வேண்டும். 2017 ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 17,530 பெலினோ கார்கள் விற்பனையாகின.

 

மாருதி பெலினோ

அந்த 2 லட்சத்தில், சுமார் 1.54 லட்சம் பெட்ரோல் மாடல்களும் 44 ஆயிரம் டீசல் மாடல்களும் அடக்கம். மேலும், இந்த 20 மாத காலத்தில், பெலினோவின் எக்ஸ் ஷோரூம் விலை, சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது. ஆனால் என்ன, மாதாந்திர விற்பனையும் கூடவே அதிகரித்திருக்கிறதே. மாருதி சுஸூகியின் நெக்ஸா டீலரில் விற்பனைசெய்யப்படும் பெலினோவின் ஸ்போர்ட்டி வேரியன்ட்டான RS, போலோ GT TSI காருக்கு போட்டியாக, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிவந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close