Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 ஆண்டுகளில் ஆப்பிள் பங்கு அடைந்த உச்சம்?

எவ்வளவோ ஸ்மார்ட்போன்கள் புதிது புதிதாக வந்தாலும் இன்னும் ஸ்மார்ட்போன்களின் தலைவனாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தான் உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபோன் தயாரிப்பை அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தப் பத்து ஆண்டுகளில் அடுத்தடுத்து தனது ஐபோன் தயாரிப்புகளை வெளியிட்டு ஐபோன் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வந்தது.

ஆப்பிள்

முன்பு பெரும்பணக்காரர்களுக்கான தயாரிப்பாக மட்டுமே இருந்துவந்த ஆப்பிள் தயாரிப்புகள் இன்று எல்லா தரப்பினரின் கைகளிலும் வந்து சேர்ந்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்துக்குக் கிடைத்த இந்த அமோக வரவேற்பால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த
10 வருடத்தில் 744 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது.

அதாவது, முதல் ஐபோன் வெளியிடப்பட்ட வருடம் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்திய ரூபாயில் 6460. இன்று ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு ரூ.54,500. ஆப்பிள் நிறுவனப் பங்குகளை இந்தப் பத்து ஆண்டுகளுக்கு ஒருவர் வைத்திருந்தால் அவர் இந்நேரம் கோடீஸ்வரராயிருப்பார் என்றால் மிகையில்லை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close