Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்த்திபனுக்கு கைகொடுத்த விக்ரம்!

ஶ்ரீதர் இயக்கத்தில் உருவான, 'தந்துவிட்டேன்  என்னை' திரைப்படத்தில் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார் விக்ரம். அதன்பின், அவரது திரைவாழ்வில் நீண்ட இடைவெளி விழுந்தது. 'சேது' படத்தில் நடிப்பதற்கு முன்பு, ஒரு நல்ல வாய்ப்புக்காக விக்ரம் காத்திருந்தார். அப்போது, பார்த்திபன் இயக்கி  நடித்து வெளிவந்த திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டன.

தனது 'ஹவுஸ்ஃபுல்' படத்தில் விக்ரம் நடிப்பதற்கென்றே தனி ட்ராக்  ஒன்றை உருவாக்கி, விக்ரமை நடிக்கவைத்தார் பார்த்திபன். அப்போது, தனக்குக் கொடுத்த வாய்ப்பை மறக்காத விக்ரம், இப்போது கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்துவரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன்தான் நடிக்க வேண்டும் என்று கெளதம் மேனனிடம் சண்டைபோட்டு, பார்த்திபனை நடிக்க வைத்திருக்கிறார். நன்றியை மறக்காத விக்ரம்!   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close