Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி- இனி வாகனங்களை நிறுத்தத் தேவையில்லை! 

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளைக் கொண்டு செல்லும்போது சோதனைச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால், சில நேரங்களில் ஒரு நாள் முழுவதும் விரையமாகிறது. 

வாகனங்கள்


இன்று முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளதால், சரக்குகளை வேறு மாநிலத்துக்கு எடுத்துச் செல்பவர்கள் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு- கேரள மாநில எல்லையில் இருக்கும் கோவையை அடுத்த க.க.சாவடி-யில் (K.G.CHAVADI) போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக நிற்கும். இப்போது, இந்த சோதனைச் சாவடியில், `ஜூலை 1-ம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்துள்ளதால் வணிக வரித்துறை சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்த அவசியமில்லை' என தமிழ்நாடு அரசு வணிக வரித்துறை அறிவித்துள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close