Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல்! சேலத்தை அதிரவைக்கும் அரசியல்வாதி

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பான், குட்கா போதை விற்பனையாளர்களுடன் ஆட்சியாளர்கள் கூட்டணி போட்டு செயல்படுகிறார்கள். என்ற குற்றச்சாட்டைக் கூறி சட்டசபையை வெளிநடப்பு செய்கிறார். ஆனால் சேலத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் பான் மசாலா, குட்கா போதை பொருள்களைக் கொள்ளையடித்த வழக்கில் சிக்கியிருப்பது சேலம் தி.மு.க.வினரை அதிரவைத்துள்ளது.

சேலத்தின் வணிக மையமாக இருப்பது சேலம் செவ்வாய்ப்பேட்டை. இங்கு வடநாட்டவர்கள் பலர் இருப்பதால் அவர்கள் குட்கா, பான் மசாலா போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். அதனால் இப்பகுதியில் உள்ள கடைகளில் சர்வ சாதாரணமாக அனைத்து வகையான போதை வஸ்துகளும் கிடைக்கும். இந்த வியாபாரிகளிடம் சிலர் மிரட்டிப் பணம் பறிப்பதாகத் தகவல்கள் வந்ததை அடுத்து காவல்துறை நோட்டமிட்டு வந்தது. இந்நிலையில் மே 25ம் தேதி பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு 20 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான்மசாலா பொருள்களைச் சில ரவுடிகள் கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக லாரி டிரைவர் சுரேஷ் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதையடுத்து அன்னதானப்பட்டியைச் சேர்ந்த வளத்திகுமார், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ், ஶ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான  வளத்திகுமார் சேலம் 49 வது வார்டு தி.மு.க. செயலாளர். இவர்மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. மேலும் 6 குண்டர் தடுப்பு வழக்கும் இவர்மீது இருக்கிறது. வளத்திகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் போதைப்பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டுவருதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close