Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'போதைக்காக கெமிக்கலைக் கலந்து குடித்த 4 பேர்!' - பதற வைத்த பென்னாகரம் ஃபார்முலா

மதுபோதையில் இருந்த நண்பர்கள் நான்கு பேர் ரசாயனத்தை மதுவில் கலந்துகுடித்து ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஏரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பென்னாகரத்தை அடுத்த எர்ரகோல்பட்டியைச் சேர்ந்த பச்சையப்பன்- ரம்யா தம்பதிக்கு ராம்பிரசாத் என்ற 4 வயது ஆண் குழந்தை இருக்கிறது. பச்சையப்பன் சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த பொட்டனேரியில் உள்ள தனியார் கம்பெனியில் லேப் அசிஸ்டென்டாக வேலை பார்த்துவந்தார். மாமனார் ஊரான பென்னாகரம் ஏரியூருக்கு வந்த பச்சையப்பன், நண்பர்கள் உத்திரகுமார், விஜயகுமார், பழனி ஆகியோருடன் சேர்ந்து மதுகுடித்திருக்கிறார்கள். அப்போது, போதை உச்சகட்டத்தை எட்டாததால் மதுவைப்போன்று திரவ நிலையில் இருந்த ரசாயனத்தைப் பச்சையப்பன் மதுவில் கலந்துள்ளார். இந்த மதுவை நான்கு பேரும் குடித்துள்ளனர்.

பச்சையப்பன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே பச்சையப்பன் இறந்துவிட்டார். பின்னர் உத்திரகுமார், விஜயகுமார், பழனி ஆகியோரும் ரத்த வாந்தி எடுத்துள்ளனர். மூன்று பேரும்  தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கி சிகிச்சை பலனின்றி நேற்று  உத்திரகுமார், விஜயகுமார் ஆகியோர் இறந்த நிலையில், இன்று காலை பழனியும் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close