Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் மீரா குமார்: மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்

meira kumar

ஜனாதிபதித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீரா குமார், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இன்று மாலை 5 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் மீரா குமார். விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பல நாள்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக எம்.பி., எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்து ஆதரவு கோர இருக்கிறேன்' என்றார்.

meira kumar

பின்னர், தி.மு.க செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும், திமுக எம்.எல்.ஏ-க்களிடமும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ-க்களிடம் மீராகுமார் ஆதரவு கோரினார். இந்த நிகழ்வின்போது மீராகுமாருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் எம்.பி டி.கே.ரங்கராஜன், கனிமொழி எம்.பி ஆகியோரையும் நேரில் சந்தித்தார் மீரா குமார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close