Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் பழனிசாமியின் ஆதரவையும் பெற்றுச்சென்ற ராம்நாத் கோவிந்த்

edappadi

ஜனாதிபதித் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த், முதல்வர் பழனிசாமியின் ஆதரவை கோரினார். புதுவை முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரிய ராம்நாத் கோவிந்த் சென்னையில முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். 

edappadi

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோரும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ramnath

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் ராம்நாத் கோவிந்த். இந்த நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களும் பங்கேற்றனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்களும் தங்களது ஆதரவை ராம்நாத்துக்கு தெரிவித்துள்ளனர். கூட்டணி கட்சி எம்.எல்.ஏவான கருணாஸ், இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close