Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனல்மின் நிலையத்திற்கு எதிராக விவசாயிகளும் மீனவர்களும் உண்ணாவிரதப் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைய உள்ள அனல் மின் நிலையத்திற்கு விவசாய நஞ்சை மற்றும் புஞ்சை விளை நிலங்களையும், குடிநீர் ஊரணிகள் மற்றும் பாசன கண்மாய்களைக் கையகப்படுத்துவதைக் கண்டித்து அனைத்து விவசாய பாதுகாப்புச் சங்கம் மற்றும் மீனவர் அமைப்பினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ramnad

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் ரூ.1000 கோடி முதலீட்டில் 1600 மெகாவாட்  திறன் கொண்ட அனல் மின்நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 1300 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த மின் திட்டத்திற்காக நாகனேந்தல், உப்பூர், வலமாவூர், திருப்பாலைக்குடி, காவனூர், துத்தியேந்தல், மோர்ப்பண்ணை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களுடன் அப்பகுதி விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்களான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர இக்கிராமங்களில் நீராதாரமாக விளங்கும் ஊரணிகள் மற்றும் பாசன கண்மாய்களும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இப்பகுதியில் அமைய உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் கழிவு நீர்க் கடலில் கலக்கும் சூழலில் கடல் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு மீன்வளம் அழிந்து போகும் சூழலும் உருவாகி உள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும், மீனவர்களும் உப்பூர் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close