Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதியை சந்தித்தார் குடியரசு தலைவர் வேட்பாளர்

இன்று சென்னையில் குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமார், தி.மு.க தலைவர் கருணாதியைச் சந்தித்தார்.

கருணாதி மீராகுமார் சந்திப்பு

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேட்பாளர்கள் இருவரும் இன்று அ.தி.மு.க , தி.முக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்க சென்னை வந்தனர்.

karunanidhi meira kumar

சென்னை வந்த மீராகுமார், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். "ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கோபாலபுரம் சென்ற அவர், தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.  கருணாநிதியை பார்த்து மீராகுமார் வணக்கம் வைக்க, அருகில் நின்ற ஸ்டாலின்,ஜனாதிபதி வேட்பாளர் உங்களை சந்திக்கவந்துள்ளார் என்று கூறினார். ஆனால் கருணாநிதி மீராகுமாரை உற்று நோக்கியபடியே இருந்துள்ளார். வணக்கம் வைத்ததற்கு தலையை அசைத்து மறுமொழி கொடுத்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனிடையே பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் ஆதரவு கோரினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close