Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலம் போராட்டக்குழுவினர் திருச்சி மத்திய சிறையில் உண்ணாவிரதம்?

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள்  உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கதிராமங்கலம் ஜெயராமன் உண்ணாவிரதம்

கடந்த 30-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. ஏற்கனவே, இந்த திட்டத்தை எதிர்த்து வரும் நிலையில், பதற்றம் அடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதால் அப்பகுதியே கலவர பகுதியாக மாறியது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் மீது, வழக்குப் பதிவு செய்து அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தலைமையிலான குழு, உண்ணாவிரதம் மேற்கொள்ளுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் திருச்சி மத்திய சிறைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து முறையான விளக்கம் அளிக்கவில்லை என்பதால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது. மேலும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததைக் கண்டித்து, கதிராமங்கலம் பகுதியில் கடையடைப்பு நடத்தப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close