Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடதுசாரி தலைவர் கோவை ஈஸ்வரன் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) மூத்த தலைவர் கோவை ஈஸ்வரன் நேற்று காலமானார்.

கோவை ஈஸ்வரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) சார்பாக பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவர் கோவை ஈஸ்வரன். இடதுசாரி சிந்தனையில் ஆழமான நம்பிக்கை கொண்டு, எளிமையான போராளியாக அவர் வாழ்ந்து வந்தார். கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களில் தனது கணீர் குரலில் இவர் ஆற்றும் உரைக்கென தனி கூட்டம் உண்டு. சுரண்டப்படும் மக்களுக்கு ஆதரவாக, வர்க்க போராட்டங்களில் மிக தீவிரமாக இயங்கியவர் கோவை ஈஸ்வரன்.

நேற்று கோவை ஈஸ்வரன் உடல்நலக் குறைவால் காலமடைந்தார். சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று இரவு 7.30 மணிக்கு உயிரிழந்தார். சென்னை நந்தனத்தில் இருக்கும் அவரது வீட்டில், பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈஸ்வரனின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close