Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணல் கொள்ளையில் சம்பாதித்ததை அதிகாரிகளுக்குத்தான் கொடுத்தேன்! - நடிகர் சிவமணி அதிர்ச்சித் தகவல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதற்காக கடந்த 29ந் தேதி, ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நடிகர் சிவமணி என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரை விசாரணை செய்த போலீஸார் சிவமணியின் வாக்குமூலத்தை கேட்டதும் வெலவெலத்து நின்றார்கள்.

 actor sivamani

    'சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் வான்ட்டடாக தன்னை இணைத்துக்கொண்ட சிவமணி, மண்ணுளி பாம்பு கடத்தல், மணல் கொள்ளை என்று பல்வேறு அவதாரம் எடுத்து இப்போது நடிகர் என்ற அந்தஸ்க்கு வந்துவிட்டார்.

                                                      
    எலந்தம்பட்டு, காமாட்சிப்பேட்டை, திருவாமூர், செம்மேடு, மேலிருப்பு, கீழிருப்பு என முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய கெடிலம் ஆற்றுக்குள் சட்டவிரோதமாக மினி குவாரி அமைத்து ஜேசிபி இயந்திரன் மூலம் 100 கோடி ரூபாய்க்குமேல் மதிப்பிலான மணலை சுரண்டி கொள்ளையடித்துள்ளான். இந்த மணல் கொள்ளையை தடுக்க வந்த கிராம மக்கள் மத்தியில் சாதி கலவரத்தை உண்டாக்கி பொய் வழக்கு போட்டு பல வீடுகளையும் எரித்துள்ளான். அவர்களை லாரி ஏற்றி கொலை செய்யவும் முயற்ச்சி செய்துள்ளான். இப்படி சம்பாதித்த பணத்தை 'திட்டமிட்ட படி' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் முதலீடு செய்து, அதில் கதாநாயகனாகவும் இவன் நடித்துள்ளான்', என்று பொதுமக்கள் அவன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிகொண்டே போகிறார்கள்.

sand

போலீஸ் விசாரணையில், 'இன்னும் பத்து நாள்கள் என்னை விட்டுவிடுங்கள். என் படத்தை நான் முடித்துவிடுவேன். நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் அதில்தான் போட்டுள்ளேன். என்னை கைது செய்தால் எல்லாமே முடங்கிவிடும். சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளினேன் என்பது உண்மைதான். ஆனால், நான் மட்டுமே இதை செய்யவில்லை. எனக்கு முன்னர் லட்சுமி, ரவி, மகாலிங்கம் என்று நிறைய பேர் அள்ளிட்டு இருந்தாங்க. அவங்க போட்ட பாதையில்தான் நான் ஆற்றுக்குள் போனேன். மணல் கொள்ளையில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில் வருவாய் துறையினர், உள்ளூர் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என பலருக்கும் பல லட்சம் பங்கு அளித்துள்ளேன். இதில் உங்கள் உயர் அதிகாரிகளும் அடக்கம்', என்றாராம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close