Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

15 ஆண்டுகால உழைப்பு... உலகின் பார்வையை தன்மீது திருப்பும் கல்பாக்கம்!

இந்திய அணு விஞ்ஞானிகள் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தும் நாள் நெருங்கி வருகிறது. அதுவும் சென்னை அருகே உள்ள  கல்பாக்கத்தில்...   
 

fast breeder kalpakkam
 

கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணு மின்நிலையத்தில் தான் இந்த மிகப்பெரிய சாதனையை விஞ்ஞானிகள் நிகழ்த்த உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக உயர் தொழில்நுட்பத்தை கொண்டு அதிவேக ‘ஈனுலை’ (Fast Breeder Reactor) உருவாக்கப்பட்டு வருகிறது. 

தற்போது, இந்தியாவில் இயங்கி வரும் அணு உலைகளில் யுரேனியத்தை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர். ஆனால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் அணு உலையில் புளூட்டோனியத்தையும், யுரேனியத்தையும் சேர்த்து எரிபொருளாகப் பயன்படுத்துவார்கள். இதில் கிடைக்கும் ஆற்றல் சாதாரண அணு உலையில் இருந்து கிடைக்கும் ஆற்றலைவிட 70% கூடுதலாகக் கிடைக்கும் என்கிறார் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியை சேர்ந்த யூகோ அமனோ.

இந்த அதிவேக உயர்தொழில்நுட்ப ஈனுலையில் இருந்து வெளியேரும் யுரேனியக் கழிவுகள், புளூட்டோனியமாக மாற்றப்பட்டு  மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்திய விஞ்ஞானிகள் 15 ஆண்டுகால முயற்சிக்கு விரைவில் பலன் கிடைக்கப்போகிறது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஈனுலை சோதனை அடிப்படையில் தான் (Prototype Fast Breeder Reactor) இயக்கப்பட உள்ளது. விஞ்ஞானிகள், ஈனுலையின் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close