Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி டி.ஆர்.பி தேர்வு : 862 பேர் ஆப்சன்ட்

திருச்சி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது.

ஆசிரியர் தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு, திருச்சியில் மொத்தம் 28 இடங்களில் நடைபெற்றன.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 10,292 பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டனர். அதில் 18 பேர் பார்வையற்றவர்கள், 147 பேர் மாற்றுத் திறனாளிகள் அடங்குவர். இவர்களில் 9,430 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 862 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வர்களுக்கு வசதியாக தேர்வு மையங்களுக்குச் செல்ல சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.  

தேர்வு நடந்த திருச்சி கே.கே.நகர் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  பாரதியார் சாலையில் உள்ள ஆர்.சி.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேலப்புதூர் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களை ஆட்சியர் இராசாமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close