Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ராம்நாத் கோவிந்துக்கும் எனக்குமான மோதல் சாதி ரீதியிலானது அல்ல'- மீராகுமார்

'ராம்நாத் கோவிந்துக்கும் எனக்குமான மோதல் கொள்கை ரீதியானதே தவிர சாதி ரீதியானது அல்ல' என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மீரா குமார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் புதுச்சேரி வருகை தந்திருந்தார். அப்போது காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சந்தித்து தனது ஆதரவைக் கோரினார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் வரும் 17-ம் தேதி புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. பா.ஜ.க சார்பில் பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இருவரும் எம்.பி, எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு திரட்ட அனைத்து மாநிலங்களுக்கும் படையெடுத்திருக்கின்றனர். நேற்று காலை சென்னை வந்த ராம்நாத் கோவிந்த் தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவைத் திரட்டினார். அதேபோல நேற்று மாலை சென்னை வந்தடைந்த மீராகுமார் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்நிலையில் இன்று புதுச்சேரி வந்த மீராகுமார் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி மற்றும் தி.மு.க எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆதரவைத் திரட்டினார். அப்போது செய்தியாளர்களைச் சந்த்தித்த மீராகுமார், 'புதுச்சேரி என்றும் அமைதியை விரும்பும் மாநிலம் என்பதால் என்னுடைய  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களுக்குரிய மரியாதையை அளிக்க வேண்டும். மதச்சார்பின்மையை காப்பாற்ற  நாம் அனைவரும் போராட வேண்டும். உங்களுடன் இணைந்து நானும் போராடுவேன். அடிப்படையில் ஏழை மக்களின் நலன்களை பாதுகாப்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயிகளும் மீனவர்களும் பெரும் துணையாக உள்ளனர். சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மகாத்மா காந்தி அவர்களின் ஆசீர்வாதத்தோடு எனது பிரசாரத்தை துவக்கியுள்ளேன். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களின் தலைமையில், 17 கூட்டணி கட்சிகள் இணைந்து என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இந்த 17 கட்சிகளும் மக்களின் உரிமையை மீட்டெடுக்க கொள்கை அளவில் ஒருங்கிணைந்துள்ளன. மக்களுக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டது பெருமைக்குரிய ஒன்று. புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க உறுப்பினர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனனர். தாழ்த்தபட்டவர்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். ஆனால் பா.ஜ.க.வினர் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். பா.ஜ.க வேட்பாளருக்கும் எனக்குமான மோதல் கொள்கை ரீதியானதுதாதே தவிர சாதி ரீதியானது அல்ல' என்றார்.

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close