Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளாவில் 43 லட்சம் ரூபாய் மோசடி!

பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளில்  வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாக ஏமாற்றி பல லட்சங்கள் சம்பாதிக்கின்றனர். இந்த மோசடி சம்பவம் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது.
 

drugs

கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள குன்னம்குளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்னேந்து அவரது தோழி ஜின்சன் ஆகியோர்  சேர்ந்து ஃபேஸ்புக் மூலம் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக செய்தி வெளியிட்டிருந்தனர். இதனைப் பார்த்து ஏராளமானவர்கள் இவர்களை தொடர்பு கொண்டனர். அவர்களில் 83 பேரை தேர்வு செய்து கொச்சியில் வைத்து நேர்முக தேர்வு நடத்தி உள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட்டு, பட்டப்படிப்பு ஜெராக்ஸ்களோடு  43 லட்சம் வாங்கி உள்ளனர். அதன்பின் கிருஷ்னேந்து மற்றும் ஜின்சனிடம் இருந்து எந்த தகவலும் 83  பேருக்கும் கிடைக்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் இவர்களின் அலுவலகங்களுக்குச் சென்றும் வேலை பற்றி விசாரித்து உள்ளனர். இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. தினம் ஒரு காரணத்தை சொல்லி பணம் கொடுத்தவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் மனம் உடைந்த சிலர் கொச்சி போலீஸில் புகார் கொடுத்தனர். கொச்சி போலீஸார் கிருஷ்னேந்து மற்றும் அவரது தோழி ஜின்சனை கைது செய்தனர். பணம் கொடுத்து ஏமாந்த 83  பேரை போல மேலும் பலர் வெளிநாடு வேலை மோகத்தில் கிருஷ்னேந்து, ஜின்சனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனரா என கேரள போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close