Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கஞ்சா அதிக புழக்கத்தில் இருந்த பகுதி குமரி மாவட்டம். தற்போது கடுமையான போலீஸ் கெடுபிடியால் கஞ்சா விற்பனை ரகசியமாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கஞ்சா அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. அடிக்கடி வாகன  சோதனைகளில் ஈடுபடும் போலீஸார் கஞ்சாவை கிலோ கணக்கில் பறிமுதல் செய்து வருகின்றனர்.

drugs

இந்நிலையில், நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸார் ரோந்து சென்ற போது சந்தேகம் படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். அப்போது அவரின் பையை சோதனை செய்ததில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து, அந்த வாலிபரையும் உடனடியாக போலீஸார் கைது செய்தனர். போலீஸார் விசாரித்ததில் கைது செய்யப்பட்டவர் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவரின் பெயர் வினோத்குமார் என்றும், கஞ்சாவை விற்பனை செய்வதற்காக நாகர்கோவில் கொண்டுவந்ததும் தெரியவந்தது. இதுவரை யார் யாருக்கு எல்லாம் கஞ்சா விற்பனை செய்யப்பட்டுள்ளது, இதுவரை எத்தனை கிலோ கஞ்சா விற்பனை செய்யப்பட்டுள்ளது என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வினோத்குமார் சொல்லும் தகவலில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் கஞ்சா வியாபாரிகள் சிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close