Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

வங்கி ஊழியர்கள்

த்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 22-ம் தேதி  நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

''மத்திய அரசு நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு மசோதாவைக் (2017) கைவிட வேண்டும்; பொதுத்துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்கக்கூடாது; பெரு நிறுவனங்களின் வாராக்கடனை வசூலிக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்; வசதியிருந்தும் திருப்பிக் கட்டாத கடனாளிகள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்; வங்கிக் கிளைகளை மூடக்கூடாது; வங்கிப் பணிகளை வெளியாள்களுக்கு விடக்கூடாது; வாடிக்கையாளர்களுக்குச் சுமையைத் தரும் சேவைக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 22-ம் தேதி ஒருநாள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்குப் பிறகும் மத்திய அரசு தனது மக்கள் விரோதப்போக்கைக் கைவிடாவிட்டால், அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரண்டு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது'' என இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close