Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!

தமிழக சட்டசபை

சட்டசபைக்கு மூன்று நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று (03-07-17) காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது.

மிழக பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அப்போது நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதையடுத்து, 2017-18-ம் ஆண்டுக்கான முன் பண மானியக் கோரிக்கைகளும், 2016-17-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் மார்ச் 23-ம் தேதி தாக்கல்செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, ''மானியக் கோரிக்கைகள்குறித்து விவாதங்கள் நடத்தப்படாமலேயே கூட்டத்தொடரை முடித்துவிட்டதால், மீண்டும் சட்டசபையைக் கூட்ட வேண்டும்'' என்று வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், சபாநாயகரிடம் மனுக் கொடுத்தார். கவர்னருக்கும் கடிதம் எழுதினார். 

இந்த நிலையில், சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஜூன் 14–ம் தேதி தொடங்கியது. அப்போது, வனம், சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, கூட்டுறவு மற்றும் உணவு, மின்சாரம், மதுவிலக்கு, நகராட்சி, உள்ளாட்சி, சட்டம், சுற்றுலா, தொழில், சிறு குறு தொழில்கள், சத்துணவு, மாற்றுத்திறனாளிகள், நெடுஞ்சாலை, பொதுப்பணி, கைத்தறி, கதர் கிராமத் தொழில் ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. இதையடுத்து, கடந்த 30-ம் தேதி (ஜூன்) முதல் 2-ம் தேதிவரை (ஜூலை) சட்டசபைக்கு மூன்று  நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று (03-07-17) காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. சட்டசபை கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். கேள்வி நேரத்துக்குப் பிறகு, வீட்டு வசதி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகள் மீதான மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close