Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆந்திராவில் செம்மரக் கட்டைகள் பறிமுதல்..! கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்..!

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, செம்மரக் கட்டைகள் பிடிபட்டன. கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

 

 

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகேயுள்ள  கரகம்பாடி பகுதியில் கிராண்ட் ரிட்ஜ் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்தப் பகுதியில், செம்மரத் கடத்தல் தடுப்பு அதிகாரி விஜய் ஒரு  குழுவாகவும் வனத்துறை அதிகாரி நாகராஜு ஒரு குழுவாகவும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திரா, தமிழ்நாடு இரு மாநில போலிப் பதிவுஎண்கள்கொண்ட மினி லாரி ஒன்று வந்தது. அதைச் சோதனைசெய்தபோது, சுமார் 7 அடி உயரம் கொண்ட 21 செம்மரக் கட்டைகள் இருந்த. உஷாரான கடத்தல்காரர்கள், வனப் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தராவ், சம்பவ இடத்துக்குச் சென்று கடத்தல்காரர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டார்.

''தமிழக ஆந்திர எல்லையிலுள்ள கூலித் தொழிலாளர்கள், கூலி வேலைக்கு என நினைத்து வருகிறார்கள். வந்தவர்களின் கையில் பட்டை தீட்டிய அரிவாள், கோடரிகளைக் கொடுத்து, கை நிறைய பணத்தையும் கொடுக்கிறார்கள் கடத்தல்காரர்கள். குடும்பச் சூழ்நிலையை மனதில்கொண்டு, தவறு என்று தெரிந்தும் பணத்துக்காக செம்மரங்களை வெட்டச் செல்லும் அவலநிலைக்கு உள்ளாகிறார்கள்'' என்கிறார்கள், ஆந்திர சமூக சேவகர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close