Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லஷ்கர் இ தொய்பா காமாண்டர் பலி... இறுதிச்சடங்கில் திரண்ட மக்கள்!

காஷ்மீரில், அனந்த்நாக் மாவட்டத்தில் பிரிந்தி தியால்கம் பகுதியில், சனிக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் கமாண்டர், பஷீர் லஸ்கரி பலியானார். அவரின் இறுதிச்சடங்கு, கோதர்நாக் அருகேயுள்ள ஷோயிப் சலி என்ற கிராமத்தில் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அவரின்  உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். தீவிரவாதிகள் சிலரும்கூட இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, பஷீருக்கு 'துப்பாக்கி மரியாதை' செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. 

லஸ்கர் இ தொய்பா கமாண்டர் பலி

பஷீர் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் சயத் அலி ஜிலானி, யாஷின் மாலிக் ஆகியோர் காஷ்மீரில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால், காஷ்மீரில் நேற்று கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் சேவை ரத்துசெய்யப்பட்டது. மத்திய, தெற்கு காஷ்மீரிலும் ரயில்கள் இயங்கவில்லை. அனந்த்நாக் மாவட்டத்தில், 6 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பஷீர் மற்றும் அவரது கூட்டாளி அபு மாஸ் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக, போலீஸ் குற்றம் சாட்டியிருந்தது. பஷீரின் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. 

சனிக்கிழமை, பஷீர் லஸ்கரி மற்றும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைக் குறிவைத்து, பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது, இளைஞர்கள் சிலர் கல்வீச்சு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டதில், தாகீரா என்ற பெண்ணும் சக்தாப் அகமது என்கிற இளைஞரும் பலியாகினர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close