Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

மழை

வெப்பச்சலனத்தின் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை கடந்துசென்ற போதிலும், தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழைப்பொழிவு குறைந்து காணப்பட்டாலும், தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னை மற்றும் வேலூரில் 102 டிகிரி செல்ஸியஸ் வெயில் பதிவானது. அதே வேளை, மழை அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 20 மி.மீ பதிவாகியுள்ளது. நேற்று கோவை, தேனி மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

வெப்பச்சலனத்தின் காரணமாகவே இன்றும் நாளையும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை இன்று காலையிலிருந்து வானம் மேகமூட்டமாகவே காட்சியளிக்கிறது. இன்று இரவு, சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close