Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டசபையிலிருந்து தி.மு.க இன்றும் வெளிநடப்பு

தமிழக சட்டசபையில் குட்கா விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க உறுப்பினர்கள் இன்றும் வெளிநடப்பு செய்தனர்.


மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. சட்டசபை கூடியதும் காலை கேள்வி நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றது தொடர்பாகப் பேச தி.மு.க-வினர் அனுமதி கோரினர். ஆனால், தி.மு.க-வின் இந்தக் கோரிக்கையைச் சபாநாயகர் ஏற்கவில்லை. இதனால், இன்று காலையே திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 
வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் துறைமுருகன், "குட்கா விவகாரம் குறித்து விசாரணை நடைபெறகிறது என்று முதல்வர் கூறி இருந்தார். ஆனால், குற்றச்சாட்டுக்கு உட்பட்ட டி.ஜி.பி ராஜேந்திரனுக்கு பதவு உயர்வு வழங்கப்பட்டது பற்றி கேட்டோம். ஆனால், அதுகுறித்து பேச முடியாது என்று சபாநாயகர் கூறினார். அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" என்றார்.  
கடந்த வாரம், அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா விவகாரத்தில் லஞ்சம்பெற்றதாக ஒரு கடிதம் வெளியானது. ஏற்கெனவே கடந்த மாதம்
28-ம் தேதி இதே குட்கா விவகாரத்தில் பேச அனுமதிக்காததால் தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
இன்றைய கேள்வி நேரத்துக்குப் பிறகு, வீட்டு வசதி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் மீதான மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close