Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அ.தி.மு.க-வின் அணிகள் பா.ஜ.க-வின் அடிமைகளாகச் செயல்படுகின்றன' - அன்புமணி காட்டம்

:

பா.ம.க சார்பில் தாமிரபரணி ஆறு பாதுகாப்புப் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. முன்னதாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தொடங்கி நெல்லை வரையிலும், இரண்டாம் நாள் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரிலிருந்து தொடங்கி திருச்செந்தூர் வரையிலும் தாமிரபரணியைப் பாதுகாக்க வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணியும் நடந்தது. 

இதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி, ''தமிழகத்தில் வற்றாத நதி என அழைக்கப்படுவது தாமிரபரணிதான். தமிழகத்திலுள்ள 31 ஆறுகளில் தாமிரபரணியில் மட்டும்தான் சிறிதளவு தண்ணீர் ஓடுகிறது. அதிலும் கழிவுகள் அதிகம் கலந்து மாசுபட்டு நிற்கிறது. கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை கூவம் நதிபோல் மாறிவிடும். மழைக்காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைத் தடுப்பணைகள் மூலமாகவும், வெள்ளநீர் கால்வாய்த் திட்டம் மூலமாகவும் பாதுகாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தமிழகத்தை ஆண்ட இரு திராவிட கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. தாமிரபரணி ஆற்றிலுள்ள 3 பெரிய அணைகள் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டவை. இதேபோல் இதிலுள்ள 8 தடுப்பணைகளில் 1873-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை தவிர மற்ற 7 தடுப்பணைகளுமே மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை. இதைத் தொடர்ந்து புதிதாக அணைகள் ஏதும் கட்டப்படாததால்தான் வருடந்தோறும் 20 டி.எம்.சி தண்ணீருக்கு மேல் வீணாகக் கடலில் கலக்கிறது.

தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே காலாவதியான கட்சிகள் அவர்களிடம் புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. இனிமேலும், இந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அதல பாதாளத்துக்குச் செல்வது நிச்சயம். ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ். அணி, தினகரன் அணி என  அ.தி.மு.க-வில் உள்ள  அணிகள் பா.ஜ.க-வின் அடிமைகளாகவே செயல்பட்டுவருகின்றன. தவறு செய்யும் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் எடப்பாடியார் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறார். தமிழகத்தில் அரசு இயங்கவில்லை. அதற்குப் பதிலாக அலிபாபாவும் 30 திருடர்களும்தான் ஆட்சி செய்கிறார்கள். இந்த ஆட்சி நீடிக்காது. விரைவில் தேர்தல் வரும் சூழல் தெரிகிறது. நீங்கள் மாற்றத்தைக் கொடுங்கள், நான் முன்னேற்றத்தைக் கொடுக்கிறேன்’’ எனப் பேசினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close