Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை! - நெல்லைச் சரக புதிய டிஐஜி எச்சரிக்கை

'பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று நெல்லைச் சரக டிஐஜி-யாகப் புதிதாகப் பொறுப்பேற்ற கபில்குமார் சராட்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

kapil

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லைச் சரக டிஐஜி பணியிடம் காலியாக இருந்தது. மதுரைச் சரக டிஐஜி, இந்தச் சரகத்துக்கும் சேர்ந்து பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. அத்துடன், நெல்லை மாநகர கமிஷனர், துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள் பொறுப்புகளும் காலியாக இருந்ததால், குற்றச் செயல்களைத் தடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. அதனால், உடனடியாகக் காலியாக உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில், ராமநாதபுரம் சரக டிஐஜி-யாக இருந்த கபில்குமார் சராட்கர், நெல்லைச் சரக டிஐஜி-யாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, அவர் இன்று நெல்லைச் சரக டிஐஜி-யாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைப் பொறுத்தவரை, சாதிய மோதல்கள் நிறைந்த மாவட்டங்கள். இந்த மூன்று மாவட்டங்களிலும் கடந்த 20 வருடங்களாகச் சாதிய மோதல்கள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் கட்டுப்பாட்டுடன் வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் செயல்படுவோம். 

இந்தப் பகுதிகளில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் நபர்கள்குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களை போலீஸார் தீவிரமாகக் கண்காணிப்பார்கள். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர், பொதுமக்களின் நண்பனாகச் செயல்படுவார்கள். பொதுமக்கள், தங்களின் குறைகளை மனுவாகவோ ஆன் லைன் மூலமாகவோ தெரிவிக்கலாம். அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்போம்” என்றார் அக்கறையுடன்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close