Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடும் பெண்கள் மீது நடவடிக்கை! உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்

டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு சொத்துகளைச் சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் பெண் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

கடந்த சில மாதங்களாகத் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, அதற்குப் பதிலாகப் பல்வேறு பகுதியில் புதிய கடைகளைத் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் முக்கியத் துறையாக டாஸ்மாக் உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் தாக்கப்படுவதால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதோடு, அரசுக்கு வருவாயும் குறைகிறது. எனவே டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு சொத்துகளை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் பெண் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கடந்த மே 3-ம் தேதி தமிழக தலைமை செயலர், டிஜிபி ஆகியோருக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, அந்த மனுவின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு சொத்துகளை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் பெண் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும்” என மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் பெண் போராட்டக்காரர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க கோர என்ன காரணம்  எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, பெண்களை முன்வைத்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக மனுதாரர் தெரிவித்தார். அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, டாஸ்மாக் கடைகளை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close