Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் ஜான் கிரிகோரி

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து தொடரின் 2017 -2018 சீசனுக்கு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கிரிகோரி, சென்னையின் எஃப்.சி அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜான்  கிரிகோரி

இத்தாலியைச் சேர்ந்த மார்கோ மடராசி கடந்த மூன்று சீஸன்களாக சென்னையின் எஃப்.சி அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார். இவர் தலைமையில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சீஸனுடன் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, 63 வயது ஜான் கிரிகோரி அந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக ப்ரொஃபஸனல் ரீதியாக கால்பந்துடன் இணைந்திருக்கும் கிரிகோரி, இங்கிலாந்து அணிக்காகவும், பிரீமியர் லீக் கிளப்களுக்காகவும் 600-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய அனுபவம் நிறைந்தவர். போர்ட்ஸ்மெளத், பிளைமெளத் ஆர்ஜிலி, வைகோம்ப் வாண்ட்ரரர்ஸ் அணிகளில் பயிற்சியாளராக இருந்த இவர், ஆஷ்டன் வில்லா அணியில் இருந்தபோது, ஒரு முத்திரை பதித்தார். இவர் தலைமையில் 2000-ம் ஆண்டு நடந்த எஃப்.ஏ கோப்பையில் ஆஷ்டன் வில்லா அணி ஃபைனலுக்கு முன்னேறியது. 
 
2002-ம் ஆண்டு ஆஷ்டன் வில்லா கிளப்பிலிருந்து வெளியேறிய பின், டெர்பி கவுன்டி, க்வின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் போன்ற இங்கிலாந்து கிளப்களில் பணியாற்றினார். அதன் பின், இஸ்ரேலில் உள்ள மெக்காபி அஹி நசரேத், எஃப்.சி ஆஷ்டோட், எஃப்.சி கைராத் மற்றும் இங்கிலாந்தில் உள்ள மூன்றாவது டிவிஷனில் பங்கேற்கும் க்ராலே டவுன் கிளப்பில் இருந்தார்.   

‛‛ஜான் கிரிகோரியைத் தலைமைப் பயிற்சியாளராக நியமித்ததில் மகிழ்ச்சி. ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் அவர் அனுபவம் நிறைந்தவர். அவர் தலைமையின் கீழ் இந்த சீஸனில் சிறப்பாகச் செயல்படுவதை எதிர்நோக்கி உள்ளோம்’’ என சென்னையின் எஃப்.சி அணியின் சக உரிமையாளர் வீதா தானி தெரிவித்தார். 

ஜான் கிரிகோரி கூறுகையில், “சென்னையின் எஃப்.சி-யுடன் இணைவதில் ஆர்வமாக உள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு அளித்த அணியின் உரிமையாளர்களுக்கு நன்றி. ஐ.எஸ்.எல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளில் சென்னை அணியும் ஒன்று. முதல் மூன்று சீஸன்களில் மார்கோ மடராசி செய்த நற்பணியைத் தொடர விரும்புகிறேன். முடிந்தவரை இந்த சீஸனில் அணி கோப்பையை வெல்வதற்கு முயல்வேன்’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close