Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா என்னை வீட்டுக்காவலில் வைத்தாரா? நடராஜனை சீறிய ஓ.பன்னீர்செல்வம்

சசிகலாவின் கணவர் நடராஜன் தன்னைப்பற்றி அபாண்டமாக பொய் சொல்கிறார்'' என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் இன்று திருச்சி வந்த ஓ.பன்னீர் செல்வத்தை, விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏக்கள் பாலன், ரத்தினவேலு மற்றும் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து மணப்பாறை கிளம்பிய ஓ.பன்னீர்செல்வத்திடம் பத்திரிகையாளர்கள், அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னம் உங்கள் அணிக்கு கிடைத்திட கூடுதல் வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “அதிமுக சட்ட விதிகளின்படி இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும்” என்று கூறிவிட்டு காரில் ஏற முயன்றார். அடுத்து அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியை முன்வைக்க முயற்சி செய்ய, பன்னீர்செல்வத்தின் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்களை துப்பாக்கியால் நெட்டி தள்ளினர். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

அடுத்து மணப்பாறையில் உள்ள குரு திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மகன் அருண்குமார் – மஞ்சுளா வேணி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்த ஓ.பன்னீர் செல்வம், பத்திரிகையாளர்கள் முன்னிலையில், சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அதை அவர்கள் காப்பாற்றவில்லை என்றவர், உங்களை ஜெயலலிதா 5 நாள்கள் வீட்டுக்காவலில் வைத்திருந்ததாகவும் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் கூறியுள்ளாரே என்கிற கேள்விக்கு பதிலளித்தவர், அது சுத்த வடிகட்டிய பொய் என்று சீறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close