Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழ்நாட்டில் நான் ஏன் பிறந்தேன்'- ராமதாஸ் வருத்தத்துக்கு இதுதான் காரணம்

’’அ.தி.மு.க-வின் எதிர்காலம் முடிந்துவிட்டது. தி.மு.க-வின் எதிர்காலம் முடியப்போகிறது’’ என்று காட்டத்தோடு திராவிடக் கட்சிகளை வெளுத்து வாங்கினார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

'கழகத்தின் கதை அ.தி.மு.க தொடக்கம் முதல் இன்று வரையிலும்' என்ற நூல் வெளியிட்டு விழா பெரம்பலூர் எம்.எஸ்.ஆர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நூலை காடுவெட்டி குரு வெளியிட மாநில துணைத் தலைவர் திலகபாமா பெற்றுக்கொண்டார். அடுத்ததாக ராமதாஸ் பேசத்தொடங்கினார். "ஊழலை ஒழிப்பேன் என்று எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சி ஊழலில் மூழ்கிவிட்டது" என்று காட்டத்தோடு பேசினார் ராமதாஸ்.

"கறையான் புற்றுக்குள் கருநாகம் பூந்த கதைதான். கருணாநிதி தி.மு.க-வை கைப்பற்றிய விதம். இந்த நேரத்தில் எதற்காக அ.தி.மு.க-வைப் பற்றி புத்தகம் வெளியிட வேண்டும் என்று எல்லோருக்கும் சந்தேகம் எழலாம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் நடந்த சம்பவம், கூவத்தூரில் நடத்த கூத்து, கும்மாளங்களைப் பார்த்தபோதுதான் இப்படி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அ.தி.மு.க என்பது கொள்கையே இல்லாத சினிமாக் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இன்றளவும் அதே நிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது. ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு அ.தி.மு.க-வின் வரலாறு தெரியும். ஆனால், இளைஞர்களுக்குத் தெரியாது என்பதற்காகத்தான் எழுதப்பட்டது. இப்போது அ.தி.மு.க அரசு எப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். இந்தியாவிலேயே இரண்டுமுறை சிறைக்குச் சென்ற ஒரு முதல்வர் ஜெயலலிதாதான்.

தமிழகத்தின் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டவர் ஜெயலலிதாதான். தலைமையே இப்படி இருந்தால் நிர்வாகிகள் எப்படி இருப்பார்கள் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். அதேபோல் 17.2.2005-ம் ஆண்டு ஜெயலலிதா செய்த ஊழல்களை ஓர் அறிக்கையாகத் தயார் செய்து ஆளுநரிடம் (சுர்ஜித்சிங் பர்னாலா) கொடுத்தபோது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், அவரும் ஊழல்வாதிதான். அ.தி.மு.க ஆட்சியில் 70 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதைத் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் நடந்த விஷயங்களை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்’’ என்றார். அடுத்ததாக தி.மு.க பக்கம் தாவினார்.

கருணாநிதி உண்ணாவிரதம் என்ற பெயரில் சாப்பிட்டுவிட்டு குடும்பத்தோடு இரண்டு மணிநேரம் நாடகம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொத்துக்கொத்தாய் கொன்று குவித்தார்கள். இதை எப்போதும் தமிழர்கள் மறக்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் ஊழல், லஞ்சம், கலவரங்கள் அதிகரிப்பதற்கு முதல் காரணமே தி.மு.க ஆட்சிதான். 50 ஆண்டுகள் திராவிட கட்சிகளால் தமிழகமே அழிந்துவிட்டது. ஊழல் பெருக்கெடுத்து ஓடும் தமிழ்நாட்டில் நான் ஏன் பிறந்தேன் என்ற வருத்தம் என்னுள் அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கிறது. குரு என்னிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அ.தி.மு.க ஆட்சியைப் பற்றி எழுதியதைப்போல், தி.மு.க ஆட்சியைப் பற்றி புத்தகம் எழுதச் சொல்லியிருக்கிறார். தி.மு.க-வின் ஊழல் செயல்பாடுகளைப் பற்றி எழுத வேண்டும் என்றால் ஐயாயிரம் பக்கத்துக்கும் மேல் எழுதவேண்டியிருக்குமே" என்று கிண்டலாக முடித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close