Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலத்தைவிட்டு காவல்துறை வெளியேற வேண்டும்... கொந்தளித்த முத்தரசன்

'கதிராமங்கலத்தைவிட்டு காவல்துறை வெளியேற வேண்டும், இல்லையென்றால் அனைத்துக் கட்சித்தலைவர்களும் அங்கே செல்வோம், அப்போது அங்கே எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என இந்தியாவை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்று பிரசார பயணத்தில் கும்பகோணத்தில் பேட்டியளித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் முத்தரசன்.

'தமிழ்நாட்டில் ஊழல் புரையோடிவிட்டது, ஊழல் குறித்து அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் ஆவணங்களை வெளியிட்டும், ஊழல் குறித்து எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. தமிழக அரசு போதிய பலத்துடன் உள்ளது. ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில், அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் லோக்ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் லோக்ஆயுக்தா சட்டம் கொண்டு வந்திருந்தாலும், தமிழக அரசு லோக்ஆயுக்தா சட்டைத்தை நிறைவேற்றத் தயங்குகிறது. எனவே,  நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக்ஆயுக்தா நிறைவேற்ற வேண்டும்.

மத்தியில் ஆளும் மோடி அரசு, மூன்றாண்டு கால ஆட்சியை சாதனை ஆட்சியாக கூறிவருகிறது. அது உண்மையென்றால் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் லோக்ஆயுக்தா சட்டரீதியாக நிறைவேற்றத் தயாராக இல்லை. இதனால், ஊழல்தான் அதிகம் நிலவுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, நீட் தேர்வு, இந்தி திணிப்பு போன்ற தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் விட்டுவிட்டு, தங்களது பதவிகளை தக்க வைத்துக்கொள்ள மாநில அரசு செயல்படுகிறது. அ.தி.மு.க. அரசு செயல்படாத அரசாகவும், கோமா நிலையில் இருக்கும் உள்ளது. மணல் கொள்ளை, குடிநீர்பிரச்னை, டாஸ்மாக் பிரச்னைக்காக போராடும் மக்களை காவல்துறையைக்கொண்டு அடக்குகிறது தமிழகஅரசு.  

கதிராமங்கலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பிடுங்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். போராடும் மக்களை காவல்துறையைக் கொண்டு தாக்கியும், கைதுசெய்து சிறையில் அடைத்தும் அடக்குமுறை செய்தும் வருகிறது மாநில அரசு.  மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை, அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் அரசியல் அமைப்புகளையும் கைது செய்கிறார்கள். இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா? நான்காவது நாளாக கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் அப்பகுதி மக்கள். வரும் 9-ம் தேதிக்குள் காவல்துறையினர் கதிராமங்கலத்தைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் 10-ம் தேதி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கதிராமங்கலத்துக்குள் செல்லும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close