Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க நாராயணனுக்கு எதிராக சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார்!

பா.ஜ.க பிரமுகர் நாராயணன் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் அம்பேத்கர் - பெரியார் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது.

வே.மதிமாறன் மற்றும் நாராயணன்

மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் யோகா தினம் மற்றும் அது சார்ந்த விஷயங்கள் பற்றி தனியார் செய்தித் தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட விவாதத்தில், எழுத்தாளர் வே.மதிமாறன், பா.ஜ.க பிரமுகர் நாராயணன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். அதில் இருவரும் காரசாரமாகப் பேசிக்கொள்ள, பாதியிலேயே நிகழ்ச்சியை முடித்துவைக்கும்படி ஆயிற்று. அதற்குப்பின், மதிமாறனுக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாகக் கண்டனக் குரல் எழுந்தது.

இதையடுத்து அம்பேத்கர் - பெரியார் கூட்டமைப்பு சார்பில், கொலை மிரட்டல் விடும் தொனியில் மிரட்டியதாக பா.ஜ.க நாரயணன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்து 30-க்கும் மேற்பட்டோர் கூட்டாக சென்று ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். 


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close