Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடப்பாடி அரசு மக்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்கிறதா? பி.ஆர் பாண்டியன் பேச்சு!

நேற்று  தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மாதாந்திர கூட்டம் நாள் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. அப்போது தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

"மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான அனுமதியை ஓ.என்.ஜி.சி அனுமதி பெறாமல் கதிராமங்கலத்தில் ஆழ்துளைக்கிணறு அமைத்து எண்ணெய் எடுத்து வருகிறது. மேலும் மக்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தி விருப்பம் கேட்காமலும் எண்ணெய் எடுக்கும் பணியை மேற்கொள்கிறது. இப்போது அந்த கிராமத்தில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அதனால்தான் தடியடி நடத்தினோம் என போலீசார் தரப்பில் போலியான புகார் சொல்கிறார்கள். இதுதவிர கதிராமங்கலத்தில் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க எடப்பாடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி விடுதலை செய்யாமல் இருந்தால், அது எடப்பாடி அரசு மக்களுக்கு துரோகம் ஆகும். அது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமாகும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்" என்றார், பி.ஆர் பாண்டியன்.   

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close