Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டிக்கு எதிராக தீப்பெட்டித் தயாரிக்கும் தொழிலாளிகள் கண்டனப் பேரணி..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறைக்கு எதிராக தீப்பெட்டித் தொழிற்சாலை தொழிலாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

தீப்பெட்டித் தொழிலுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதுமுள்ள பகுதி நேர மற்றும் முழு நேர ஆலைகளை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மூடி கடந்த 3 நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பகுதி  நேர மற்றும் முழு நேர தீப்பெட்டித் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 % சதவீத வரியை குறைக்க வேண்டும் என்றும் பகுதி நேர மற்றும் முழு நேர இயந்திர தீப்பெட்டித் தொழிலுக்கான வரி விதிப்பில் வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்தனர்.

அவர்கள் வேறு வேலைகளுக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதனால் 150 கோடி ரூபாய் வர்த்தகமும் முடங்கியுப் போயுள்ளது. இந்நிலையில் நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பியும், கோரிக்கைப் பதாகைகளை ஏந்தியும் பேரணியாக வந்தனர். ஜூலை 10-ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close