Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''மணல் கொள்ளைக்கு விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும்!'' -  ராமதாஸ் 

ராமதாஸ்

''தமிழகத்தின் பொருளாதாரச் சீர்குலைவுக்குக் காரணமாகத் திகழும் மணல் கொள்ளைகுறித்து விசாரணை நடத்த, தமிழக கவர்னர் உத்தரவிட வேண்டும்'' என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''தமிழகத்தில் ஒருநாளைக்கு மணல் விற்பனை மூலமாக மட்டும், 100 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆண்டுக்கு 36,500 கோடி ரூபாய் வருமானம் கொட்டுகிறது. ஆனால், அமைச்சர்களும் ஆளும் கட்சியினரும் கொள்ளையடித்ததுபோக எஞ்சிய சிதறலான 86.33 கோடி ரூபாய் மட்டும்தான் தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கப்படுகிறது. எனவே, தமிழகத்தின் பொருளாதாரச் சீர்குலைவுக்குக் காரணமாகத் திகழும் மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த, தமிழக கவர்னர் உத்தரவிட வேண்டும்'' என அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close