Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய கலெக்டர் அறிவிப்பு!

கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது : "01.04.2017 முதல் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்து வரும் குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,79,606 குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக இதுவரை 1,94,230 மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 


                      collector

 

மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள குடும்பத் தலைவர் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, தந்தை/கணவரின் பெயர், முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் ஆகியவற்றில் பிழைகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைத் திருத்தம் செய்ய ஏதுவாக கரூர் மாவட்டத்தில் எதிர்வரும் 05.07.2017, 06.07.2017 மற்றும் 08.07.2017 ஆகிய நாள்களில் வேலைநாள்களாகச் செயல்படும் அனைத்து நியாயவிலை அங்காடிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதனால்,பொதுமக்கள் அனைவரும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய தங்கள் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்குப் பிழைகளை நீக்குவதற்குத் தேவையான ஆதாரங்களுடன் சென்று தங்களது மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள பிழைகளை நீக்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்சமயம், குடும்ப அட்டை என்பது ஒவ்வொரு நபருக்கும் பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக அமைந்துள்ளதால், இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பிழைகளற்ற மின்னணு குடும்ப அட்டைகள் பெற்றுக்கொள்ள இது சரியான தருணம் ஆகும்.

மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் இல்லாத காரணத்தினால் அச்சிடப்படாமல் உள்ள குடும்ப அட்டைகளின் விபரங்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. அவ்வாறான இனங்களின் குடும்பத் தலைவரின் புகைப்படத்தையும் சிறப்பு முகாம் நாள்களில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.
                     
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close